கோவை மதுக்கரை பகுதியில் குட்டியுடன் வந்த இரண்டு காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை சூறையாடியன.
கோவை மதுக்கரை பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. அங்கு ஏராளமான வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அதிகாலை 2 மணி அளவில் அப்பகுதிக்கு குட்டியுடன் வந்த 2 காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்தது. அங்கு இருந்த அரிசி மூட்டைகளை உண்ண துவங்கின. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை விரட்ட முயற்சி மேற்கொண்டனர்.
அப்பொழுது வனத்துறை ஊழியர்கள் அரிசி மூட்டை எடுத்து சாலையில் கொட்டி தின்று கொண்டு இருந்த யானை அருகே பட்டாசு வீசினார். உடனே அங்கு இருந்து யானைகள் திரும்பி வனப்பகுதியை நோக்கி சென்றது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி யானைகளை வனப் பகுதியில் விரட்ட பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை பயன்படுத்தி வனவிலங்குகளை அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அங்கு வந்த வனத்துறை ஊழியர்களே யானை அருகே பட்டாசு வீசி யானையை விரட்டியாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் வன ஆர்வலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“