Elephants migratory path issue : யானைகள் வழித்தடங்கள் என்பது பாரம்பரியமாக இரண்டு வாழிடங்களுக்கு மத்தியில் பயணம் செய்யும் பாதையாகும். பல நேரங்களில் தனியார் உரிமையாளர்களால் இந்த வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கே பல கட்டிடங்களை கட்டுவதால், யானைகள் செய்வதறியாமல் மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் காட்டேரி பூங்கா அருகே நடைபெற்ற சம்பவம் ஒன்று, யானைகள் வழித்தடங்கள் எதற்காக யாருக்காக என்பதை மீண்டும் வலியுறுத்த வகை செய்துள்ளது.
Advertisment
புகைப்படம் - special arrangement
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் 11 காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உலா வருகிறது. இன்று குன்னூர் காட்டேரி பண்ணையில் ஒரு குட்டியானையுடன் மூன்று காட்டு யானைகள் சாலையை கடந்து தோட்டக்கலைத் துறையின் பண்ணை வழியே சென்றது. பல ஆண்டுகளாக தோட்டகலைத்துறையின் பண்ணை வழியே தன்னுடைய வாழிடத்திற்கு செல்லும் யானைகளுக்கு அங்கே அமைந்துள்ள உரக்கிடங்குகள் தடையாக இருந்துள்ளது. காட்டேரி பண்ணைக்குள் நுழைந்த அந்த யானைகளை பார்த்து மக்கள் அச்சம் அடைந்த நிலையில், வனத்துறையினர் அந்த யானைகளை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் இறங்கினார்கள். இருப்பினும், தன்னுடைய வழித்தடங்களில் அமைக்கப்பட்டிருந்த உரக்கிடங்கினை உடைத்து அதன் வழியாக வெளியேறி சென்றுள்ளது.
யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பல ஆண்டுகளாக வனவிலங்கு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இது போன்ற ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லாமல் வழித்தடங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news