கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே சோளக்காட்டை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உக்குளம் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் போன்ற பயிர்களை விஜயகுமார் என்பவர் பயிரிட்டிருந்தார். இப்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் அப்பகுதியில் முகாமிட்டிருந்த 3 காட்டு யானைகள், சோளக்காட்டிற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விட்டன.
இத்தகவலறிந்த விவசாயி, சேதமடைந்த சோளக்காட்டை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால் அவருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் விதமாக வேலி அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“