இன்றைய தினம் ட்விட்டர் வலைப்பக்கத்தில் ‘என்கவுண்டர் எடப்பாடி’ என்ற ஹாஸ்டேக் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக்கோரி நடந்த இந்த போராட்டத்தின் 100 ஆவது நாள் கலவரத்தில் முடிந்தது.
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 13 பேரில் ஒவ்வொருவரின் பின்புலமும் தற்போது வெளியாக தொடங்கியுள்ளது. இதில் பலரும் அப்பாவி மக்கள் என்ற செய்தி, அரசியல் தலைவர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறி பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற 6 அரசியல் தலைவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூடு, ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எதிரான கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முதல்வர் எடப்பாடிக்கு எதிரான முழுக்கங்களும் ஒலிக்க தொடங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ட்விட்டர் வலைப்பக்கத்தில் என்ற ஹாஸ்டேக் சென்னை ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது, கூடவே நெட்டிசன்கள் மீம்ஸ், ட்ரோல் வீடியோக்களை இந்த ஹாஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றன.