scorecardresearch

‘ஜாமீன் வேண்டாம்… சிறையில் இருந்து கொள்கிறோம்’ காஞ்சிபுரம் வட்டார ரவுடிகள் அலறல்

காஞ்சிபுரம் மாவட்ட முக்கிய ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள் வெளியே இருந்தால் போலீஸ் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளிவிடுவார்களோ என்ற பீதியில் ஜாமின் வேண்டாம் என்று அலறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

encounter specialist Vellathurai, Kanchipuram Rowdies alarming, Kanchipuram Rowdies do not want bail, ஜாமீன் வேண்டாம், சிறையில் இருந்து கொள்கிறோம் காஞ்சிபுரம் ரவுடிகள் அலறல், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை, rowdies, chennai, special force team

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபடும் ரவுகளை ஒடுக்க ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டதில் இருந்து இந்த மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் திகிலடைந்து போயிருக்கிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது என்று புகார்கள் எழுந்தன. சென்னையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், படப்பை, ஒரகடம் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் ரவுடிகள் மாமூல் வசூலில் ஈடுபடுவதாகவும் கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தமிழ்நாடு காவல் துறை என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் ரவுடிகளை ஒடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதுமே ரவுடிகள் ஆடிப்போனார்கள்.

சென்னையை ஒட்டியுள்ள் ரவுடிகளை ஒடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைத்த, ஒரு வாரத்திற்குள்ளாகவே செங்கல்பட்டுவில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர். இரடைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர். இதனால், மேலும், திகிலடைந்த முக்கிய ரவுடிகள், உயிருக்கு பயந்து அண்டை மாநிலங்களில் தலைமறைவாகி உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, சென்னை, புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளின் ஒட்டு மொத்த பட்டியலை காவல்துறை தயாரித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பை குணா, குன்றத்துார் வைரம், நெற்குன்றம் சூர்யா பல ரவுடிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆட்டம் போடும் முக்கிய ரவுடிகள் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என்று பேசப்பட்டதால் ரவுடிகள் எல்லோரும் அச்சத்தில் உள்ளனர்.

சில ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளே சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான ரவுடிகள் குறித்தும் பதுங்கிய ரவுகள் குறித்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள் வெளியே இருந்தால் போலீஸ் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளிவிடுவார்களோ என்ற பீதியில் சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பு, வழக்கில் ஜாமின் வேண்டாம் சிறையிலேயே இருந்துகொள்கிறோம் என்று அலறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார்களை தமிழ்நாடு காவல்துறை தென் மாவட்டங்களுக்கு தூக்கி அடித்திருக்கிறது. மேலும், ரவுடிகளிடம் கூகுள் பே, போன் பே மூலம் மாமூல் வசூலித்த போலீசார்களின் மொபைல் எண்களை வைத்து அவர்களின் வங்கி கணக்கையும் காவல்துறை கண்காணித்து வருகின்றனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Encounter specialist vellathurai kanchipuram rowdies alarming do not want bail