/indian-express-tamil/media/media_files/MMClgeOlU14eWs7RH1No.jpg)
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் பூந்துரை கிராமத்தில் செம்மண் குவாரி செயல்பட்டில் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் அதிகளவு செம்மண் அள்ளிய விவகாரத்தில், அரசிற்கு ரூ. 28.31 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடி தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்த நிலையில், செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ED, Chennai has provisionally attached immovable and movable properties worth Rs. 14.21 Crore in the case of Illegal Red Earth Mining in the state of Tamil Nadu by the family members and associates of K. Ponmudy, presently MLA (DMK Party)
— ED (@dir_ed) July 26, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.