சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் காவிரி மருத்துவமனையில் பைபாஸ் சிகிச்சை பெற்றார்.
இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதிகள் நிஷா பானு மற்றம் பரத சக்கரவர்த்தி ஆகிய இருவர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். பின்னர், மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட்டு ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், வழக்கை முடித்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை நீதிபதி மற்றொரு தேதிக்கு தள்ளிவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“