Advertisment

ரூ.60 கோடி சொத்துக் குவிப்பு: அமலாக்கத் துறை லிஸ்டில் புதிய அமைச்சர்!

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் உள்ளது. அவர் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை முறையாக விசாரிக்கவில்லை” என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
dmk mla anitha radhakrishnan, anitha r radhakrishnan, a youth criticize anitha radhakrishnan and video released, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, இளைஞர் வீடியோவில் மிரட்டல், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், anitha radhakrishnan mla, a youth warning anitha radhakrishnan mla

இது தொடர்பாக விசாரணையானது சுமார் 50 நிமிடங்கள் நடந்தன. தொடர்ந்து வழக்கை நவ.1ஆம் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்திவைத்தார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று (அக்.11) விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்குமாறு அமலாக்கத் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் உள்ளது. அவர் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை முறையாக விசாரிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் 90 சதவீத வாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆகவே அமலாக்கத் துறை மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என வாதிட்டனர்.

இது தொடர்பாக விசாரணையானது சுமார் 50 நிமிடங்கள் நடந்தன. தொடர்ந்து வழக்கை நவ.1ஆம் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்திவைத்தார்.

அமலாக்கத் தறை தரப்பில் வழக்றிஞர் ரமேஷ் ஆஜரானார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சுதாவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பாக வழக்கறிஞர் மனோகரனும் ஆஜரானார்கள்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment