அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.42 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்கும் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார்.
அதாவது அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய பொன்முடி வழக்கறிஞர் சரவணன், “இன்று (ஜூலை18) மாலை 4 மணியளவில் பொன்முடி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“