New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/p.chidambaram...jpg)
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதமப்ரம் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதமப்ரம் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை உள்பட 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ப.சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கபிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தினார்கள். இதையடுத்து, கோர்ட் மூலம் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர். இந்நிலையில் கோர்ட்டில் அனுமதி பெற்று, கார்த்தி ப.சிதம்பரம் இன்று வெளிநாடு சென்றுள்ளார்.
Good news . ED raids in chennai and other places in the Aircel Maxis scam money laundering case. Watching closely if Sakuni will interfere
— Subramanian Swamy (@Swamy39) December 1, 2017
இந்நிலையில் இன்று காலை அமலாக்க பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கொல்காத்தா ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னையில் நான்கு இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. ப.சிதம்பரத்தின் உறவினர்கள் வீடுகள் என்று சொல்லப்படுகிறது. சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதர் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இது குறித்து அமலாக்கப்பரிவு அதிகாரிகள் சோதனை நடப்பதை உறுதி செய்துள்ளனர்.மேலும் விபரங்களை சொல்ல அவர்கள் மறுத்துவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.