Advertisment

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு: தி.மு.கவில் அடுத்த பரபரப்பு

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ponmudi House Locker

அமைச்சர் பொன்முடி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 17) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Advertisment

துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, சைதாப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக, கடந்த மாதம் 13-ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இதன் பின் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கைது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தி.மு.க அரசின் மற்றொரு முக்கிய அமைச்சர் பொன்முடி வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்முடி தொடர்புடைய இடங்களில் எந்த குற்றத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ponmudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment