புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். கறம்பக்குடி தாலுகா கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். சகோதரர்களான இருவரும் அ.தி.மு.க-வில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்து மாவட்டப் பொருளாளராக உள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர்கள்.
இந்நிலையில், இவர்களது வீடு மற்றும் ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு பழனிவேல் ஆகிய 3 பேரின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் அமலாக்கத் துறையினர் இன்று காலையில் இருந்து அதிரடி போதனை மேற்கொண்டு வருகின்றர்.
முதற்கட்ட விசாரணையில், அரசு கட்டடங்களில் ஒப்பந்த பணி மேற்கொண்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7 வாகனங்களில் 15 அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னையிலிருந்து வந்துள்ளனர்.
சோதனைக்கு உள்ளான பிரமுகர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு மிகுந்த நெருக்கத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“