/indian-express-tamil/media/media_files/2025/04/10/TZdNLJFIng4wAxgrskjW.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்த சேவகன் மகன் மோகன் குமார் வயது (34). இவர் சென்னையில் உள்ள Zoom Info என்ற தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த லாரி மோதியதில் மோகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது தொடர்பாக அவர் தந்தை சேவகன், தாய் சாந்தி, தங்கை ஜெயந்தி, தம்பி நவராஜ் ஆகியோர்களுக்காக கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்-1-ல் வழக்கறிஞர்கள் ஏ.எஸ்.சந்திரசேகரன், L. உஷாராணி, கே. கலையரசன், ஆகியோர்கள் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி வி. ஆனந்தன் இறந்து போன இன்ஜினியர் மோகன் குமார் குடும்பத்திற்கு
1 கோடியே 30 லட்சம்,01, ஆயிரம் 200 ரூபாய் வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தர்விட்டார். வட்டியுடன் சேர்த்து ஒரு கோடீயே 44 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.