/tamil-ie/media/media_files/uploads/2018/03/Anna-University-Entrance-Picture.jpg)
anna university result, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
Anna University Engineering Counselling 2018 :பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்காக மாணவர்கள் விண்ணப்பித்த சான்றிதழ் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி வரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் பொறியியல் படிப்பின் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தனர். பின்பு இவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை 42 மையங்களில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறிய மாணவர்களுக்காக சிறப்பு முகாம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், தகுதியுள்ள மாணவர்களைக் கொண்ட தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்றும், ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இன்றும் சான்றிதழ் சரிபார்பில் கலந்துக் கொள்ளாத மாணவர்கள், இந்தாண்டு நடைபெறும் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள முடியாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.