Engineering general category counselling : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் இன்று நடைபெற உள்ளது. கவுன்சிலிங் மூலமாக இந்த ஆண்டு கணிசமான அளவில் மாணவர்கள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களான அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் நிறைவுற்றது. அந்த கவுன்சிலிங்கில் மெக்கானிக் மற்றும் சிவில் பொறியியல் படிப்புகளை படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதாக கல்லூரி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் மூலமாக குறைந்தது 6442 மாணவர்களுக்கு சிறப்பு பிரிவின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 853 மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனர். 334 மாணவர்கள் சிவில் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த காலங்களில் இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சிவில் மற்றும் மெக் பாடப்பிரிவிகளில் காலியாக இருக்கும் இடங்கள் குறைவாகவே இருக்கும். கடந்த காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக பல கல்லூரிகள் இந்த பாடப்பிரிவுகளுக்கான இடங்களை குறைத்துள்ளன என்று சுயநிதி தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டு செயலாளர் கூறினார்.
அதிக வாய்ப்புகள் இல்லாத காரணங்களால் பல அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான இடங்கள் முதல் கலந்தாய்வின் போது ஒதுக்கப்படவில்லை என்று கூறும் கல்வியாளர்கள் இந்த ஆண்டு மாணவர்கள் தங்களுக்கு தேவையான படிப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
11,390 விண்ணப்பதாரர்கள் தங்களின் தரவரிசை அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டில் படிக்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தற்காலிக ஒதுக்கீடு 5,837 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil