/tamil-ie/media/media_files/uploads/2022/09/GettyImages-sella-rice-1200.jpg)
தமிழ்நாட்டில் ஏப்.1,2023முதல் செறியூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (டிச.19) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த காலத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டு உள்ளது” என்றார். மேலும், “இனி வருங்காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Tamil.jpg)
தொடர்ந்து செறியூட்டப்பட்ட அரிசி குறித்து அவர் பேசுகையில், “மத்திய அரசின் அறிவிப்பின்படி, முதலமைச்சர் ஆணையின்படி பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும்” என்றார்.
இந்த அரிசியில், இரும்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி. 100 கிலோ அரசியில் 1 கிலோ வழங்கப்படும்” என்றார்.
மேலும், “கடந்த 18 மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்-ஐ முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர். செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பதிவு செய்து 755 அரவை ஆலைகள் உள்ளன; நெல்-ஐ சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.