scorecardresearch

பாஜக நிர்வாகி  வீட்டுக்குள் அத்துமீறியதாக புகார்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

பாஜக நிர்வாகி வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்ததாக எழுந்த புகாரின் அடைப்பையில் இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்த தேவி, என்பவர் பாஜக வட சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர். 2 நாட்களுக்கு முன்னர் இரவுப் பணியில் இருந்த ஆர்.கே.நகர் காவல் நிலைய காவலர்கள் பாலஜி, பரித் ராஜா ஆகியோர் தேவியின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டுக்குள் இருந்த தேவியின் கணவர் ஆனந்தகுமார், இதை எதிர்த்து கேட்டுள்ளார். அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேவியின் கணவர் ஆனந்த குமார், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்த காவலர்கள் பாலாஜி மற்றும் பரித் ராஜா ஆகியோரை  பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.          

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Entering bjp member house rk nagar two police men arrested

Best of Express