/indian-express-tamil/media/media_files/2025/08/09/environment-club-2025-08-09-07-19-21.jpg)
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது.
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக் குழுமங்களின் செயலர் இராஜசேகரன் தலைமை உரை ஆற்றினார். இயக்குனர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பதிவாளர் அனுசுயா தொடக்க உரை ஆற்றினார்.
முனைவர் நவீன் தலைவர், உலகளாவிய இயற்கை அமைப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவருடைய வாழ்த்துரையில், மாணவர்கள் தான் வாழ்கிற, பயில்கிற, பணியாற்றுகின்ற, இடத்தைச் சுற்றி உள்ள நீர் நிலைகளை முதலில் பாதுகாக்க வேண்டும். அத்தகைய நீர் நிலைகளில் மரக்கன்றுகள் பனை விதைகள் நட்டு பாதுகாக்க வேண்டும். தூய்மையாக பராமரிக்க வேண்டும் திருச்சிராப்பள்ளியை பசுமையான உயிர்ச் சூழல் மண்டலமாக மாற்றுவதற்கு நெகிழி இல்லா திருச்சிராப்பள்ளியை உருவாக்க துணிப்பையை எடுத்து நெகிழிப்பை தவிர்க்க வேண்டும் என்றார்.
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் காலந்தோறும் நீர்நிலைகளை பாதுகாப்பது அரியவகை மரபு மரங்களை பாதுகாப்பது அவற்றை கோயில்களோடும் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் சங்க இலக்கிய மரபு நமக்கு கற்றுத் தருகிறது. எனவே அத்தகைய மதிப்புமிக்க தாவரங்கள் மரங்கள் உயிர்ச் சூழல் வாழ்விடங்களை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சிறந்த உயிர்ச்சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை வழங்கிய சூழலியல் ஆர்வலர் நவீன் இன்றைய இளைஞர்கள் யாவற்றையும் வேடிக்கை பார்க்காமல் சமூக ஊடகங்களில் மூழ்கி விடாமல் தன்னால் முடிந்த இயற்கைக்கு ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுக்க வர வேண்டும், அதற்கு இந்த கல்லூரி மாணவர்கள் முன்னோடியாக திகழ வேண்டும் தனித்துவ அடையாளத்தோடு கற்றவர்கள் நாம் சூழலுக்கு பாதுகாப்பு அரணாக பல்வேறு செயல்களை முன்னெடுக்க வேண்டும் ஒவ்வொரு உயிர்களும் சூழலுக்கு நன்மையை வழங்குகிறது. மனித சமூகம் கடைசியில் தோன்றியது ஆனாலும் எல்லா உயிரினங்களுக்கும் தீங்கு செய்யக்கூடிய உயிரினமாக மனித இனமே இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருப்பது அவலத்திற்குரியது. எனவே அந்த நிலையில் இருந்து மாறி நாம் ஒவ்வொருவரும் சூழலைப் பாதுகாக்கிற நேசிக்கிற அதற்கான செயல்படுகிற தனித்துவமிக்க மனிதர்களாக நாம் திகழ வேண்டும், அதற்காகத்தான் இந்த தண்ணீர் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பதிவாளர் அனுசுயா உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர், அவர்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
இந்த நிகழ்ச்சியை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள்.சித்ராதேவி, ஸ்ரீராம், பரத்குமார், வரலட்சுமி இந்த நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இந்நிகழ்வில் அமைப்பின் இணைச் செயலாளர் ஆர். கே. ராஜா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.