/indian-express-tamil/media/media_files/XNoGyneH4qUfdpsabpcQ.jpg)
சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து தேர்தல் பத்திரம் வாயிலாக ரூ.506 கோடி பெற்ற ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Dmk Vs Aiadmk | Electoral Bonds | “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ப்யூச்சர் கேம்ஸ் (FUTURE GAMINGS) என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது” என அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.
சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் எம்.ஜி.ஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 17, 2024
சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல்… pic.twitter.com/unPcwIX9I9
ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரம் வாயிலாக தி.மு.க பெற்ற நிதி தொடர்பான ஆதாரங்கள் இன்று வெளியாகின. அதில், தி.மு.க ப்யூச்சர் கேம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.506 கோடி பெற்றுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.