Advertisment

மலிவான விளம்பரத்திற்காக எங்கள் மீது ஊழல் புகார்: ஐகோர்ட்டில் இ.பி.எஸ் தரப்பு வாதம்

மலிவான விளம்பரத்திற்காகவே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மருத்துவ கல்லூரி ஊழல் வழக்கு : இ.பி.எஸ்-க்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

2019 முதல் 2021ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

டெண்டர் பணிகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக தமிழக அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது.

அறப்போர் இயக்கம் தவறாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் தனக்கு அவப்பெயரையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதர்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்று கூறினார்.
மேலும், ஒரு நிறுவனத்திற்க்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை என்றும், டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை என்றும் வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கும் விளைவிப்பதற்காகவும் மலிவான விளம்பரத்திற்காகவும் அறப்போர் இயக்கம் ஊழல் குற்றம் சாட்டுகிறது என்று இ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் நேரடியாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு எனவும் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தொடர்ந்து வாதிட்ட இ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர், லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டை கூறும் முன் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபரைக் குறித்து அவதூறு கருத்துகளை கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தெல்லாம் ஈடுசெய்ய முடியாது என்று கூறினார்.

ஆதாரமில்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறுவது மான நஷ்ட வழக்குக்கு உட்பட்டது என்பதால் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment