எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை (செப்.20) சந்தித்தார். இது அதிமுகவின் உள்கட்சி பிரச்னைக்கு தீர்வு கிடைககும் என அக்கட்சி நம்புகிறது.
ஏனெனில் இந்தச் சந்திப்பு, செப்.22 மற்றும் 23ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி., நட்டா தமிழகம் வருவதற்கு முன்னதாக நடந்துள்ளது.
மேலும் கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது பலரும் எதிர்பார்த்தபடி எடப்பாடி மற்று்ம் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் சந்திக்கவில்லை.
இது பற்றி கூறிய டெல்லிக்கு நன்கு அறிமுகமான அதிமுக தலைவர் ஒருவர் இது எல்லாம் சரியாகிவிடும் என்றார். மேலும், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம், ஒற்றை தலைமை சச்சரவு ஆகியவை குறித்து எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கி இருப்பார்” என்றார்.
தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அவர் வசம் பின்தொடர முடிவெடுத்துவிட்டனர்.
அதிமுக கட்சியை கைப்பற்ற நினைக்கும் டிடிவி தினகரன் மற்றும் வி.கே. சசிகலா குறித்தும் எடப்பாடி ஷாவிடம் பேசியிருப்பார். எனினும் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்பதை தெரிவித்திருப்பார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பல நாள்களாக முயற்சித்துவருகிறோம். அவரின் தமிழ்நாட்டு பயணத்தின்போது, கவர்னர் மாளிகையில் அவரை சந்திக்க அனுமதி கோரினோம்.
ஆனால் நேரம் ஒதுக்கவில்லை.
விமான நிலையத்தில் மரியாதை நிமிர்த்தமான சந்திப்புக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது விரைவில் டெல்லியில் சந்திக்கலாம் எனக் கூறப்பட்டது.
கடந்த காலங்களில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக ஆதரித்தனர்.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. மேலும் ஓ.பி.எஸ்.ஸும் டிடிவி தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆதரவை கோருகிறார். மறுபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் செல்வாக்கு கூடுகிறது.
இதற்கிடையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவந்தவர் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த நிலையில், கடந்த காலங்களில் ஓ.பி.எஸ்.க்கு பக்க பலமாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான குருமூர்த்தி பின்னால் இருந்தார்.
தற்போது அவரின் ஆதரவும் ஓ.பி.எஸ்.க்கு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் அவர் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil