scorecardresearch

90% பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவை திரட்டிய இ.பி.எஸ்: உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் இன்று க்ளைமாக்ஸ் 

இ.பி.எஸ் தரப்புக்கு 90% பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு என்று தகவல் வெளியாகி உள்ளது.

90% பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவை திரட்டிய இ.பி.எஸ்: உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் இன்று க்ளைமாக்ஸ் 

இ.பி.எஸ் தரப்புக்கு 90% பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கட்சி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்று இரண்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தென்னரசு மற்றும் ஓ. பன்னீர் செல்வம் சார்பாக வேட்பாளார் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுக்குழுவின் மூலம்  வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலம் இருப்பதால், சுற்றரிக்கை மூலம் கருத்துக்களை பெற வேண்டும். இந்த முடிவை அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “ சுற்றறிக்கை  அனைவருக்கும் அனுப்பப்பட்டது. வாட்ஸ் ஆப், ஸ்பீட் போஸ்ட், மெயிலில் அனுப்பியதாவும். ஓபிஎஸ் தரப்பிற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு ஆவணங்களுடன் இன்று காலையில் டெல்லிக்கு தமிழ்மகன் உசைன் புறப்பட்டார். இந்நிலையில் 90% பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps and ops election commission today result