சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஆர்.என் .ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அருகருகே அமர்ந்தனர்.
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தலை தூக்க தொடங்கியது முதல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மத்தியில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
பொதுக்குழு கூட்டிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதுபோல ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை பதிலுக்கு நீக்கம் செய்தார். இந்நிலையில் இந்த விவாகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
சமீபத்தில் தமிக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஓபிஎஸ் பெயரையும் சேர்த்து கடிதம் அனுப்பினார். இது மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எடப்பாடி பழசாமி மற்றும் பன்னீர் செல்வம் அருகருகே அமர்ந்தனர். இருவரும் பேசிக்கொள்ளவில்லை . ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் அவர்களுடன் சட்டமன்றத்திற்கு ஓபிஎஸ் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த முறையே சட்டமன்றத்தில் அருகருகே அமர மாட்டோம் என்று இருவரும் தெரிவித்தது குறிப்பிடதக்கது.