EPS appoints ADMK new functionaries: அ.தி.மு.க.,வில் கே.பி.முனுசாமி மற்றும் பொன்னையனை புதிய பதவிகளில் நியமித்தும், 11 தலைவர்களை அமைப்புச் செயலாளர்களாக நியமித்தும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு பொதுக்குழு மூலம் முடிவுக்கு வந்தது. இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் நிலை, பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு அல்ல; பலமான அ.தி.மு.க.,வுக்கு குறி!
இந்தநிலையில், கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.
இது தொடர்பாக இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
கழக துணைப் பொதுச்செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக, மூத்த தலைவர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கழக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு தலைமை நிலையச் செயலாளராக இ.பி.எஸ் இருந்து வந்தார்.
கழக அமைப்பு செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பால கங்கா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil