scorecardresearch

விடுதியில் ஓ.பி.எஸ்; இல்லத்தில் இ.பி.எஸ்: ஆதரவு நிர்வாகிகளுடன் தனித்தனி ஆலோசனை

AIADMK co-ordinator O. Panneer Selvam and co-coordinator Edappadi Palanisamy will hold separate consultations with their supporters Tamil News: அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

EPS at home, OPS at Hotel; Individual meeting with district Admins
O. Panneer Selvam – Edappadi Palanisamy

O. Panneer Selvam – Edappadi Palanisamy Tamil News: அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் “ஒற்றை தலைமை” என்கிற கோஷம் ஒலித்தது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .

AIADMK single leadership issue
ஓ.பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிசாமி</strong>

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். அவர் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு சென்னைக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்த்திர விடுதியில் காலை 10 மணியளவில் தொடங்குகிறது.

இதேபோல், தனது ஆதரவு மாவட்ட மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ள இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps at home ops at hotel individual meeting with district admins