அ.தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மனோ தங்கராஜ் தூண்டுதலின் பெயரில் பா.ஜ.க.வினர் மீது பொய் வழக்கு; பொன் ராதாகிருஷ்ணன் புகார்
இதுகுறித்து அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும்; கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பது சம்பந்தமாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழுக் கூட்டம் வருகின்ற 16.4.2023 - ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil