Advertisment

எம்.ஜி.ஆர் ரசிகர்களை திரட்டும் இ.பி.எஸ்: சென்னையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

உலகம் சுற்றும் வாலிபன் பட பொன் விழா; சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்களை திரட்டும் எடப்பாடி பழனிச்சாமி

author-image
WebDesk
New Update
EPS and MGR

உலகம் சுற்றும் வாலிபன் பட பொன் விழா; சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்களை திரட்டும் எடப்பாடி பழனிச்சாமி

நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்து கடந்த 1973 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்தப் படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், நாகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத்தும் நடித்திருந்தார்.

Advertisment

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் என பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், பச்சைக்கிளி முத்துச்சரம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற பாடல்கள் மெகா ஹிட் ஆனது. மேலும், பல அரசியல் சிக்கல்களை தாண்டி வெளிவந்த இத்திரைப்படம் அந்தக் காலத்தில் தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது.

அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகளை நெருங்குவதை தொடர்ந்து, இதன் பொன்விழாவை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் சிறப்பு விழா நடத்துகின்றனர்.

இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். காலை 1 மணி முதல் இரவு வரை விழா நடக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mgr Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment