eps can meet ops says ops side former minister | Indian Express Tamil

இ.பி.எஸ்  உடன் ஓ.பி.எஸ் சந்திப்பு?  அரசியலில் எதுவும் நடக்கலாம் ;கு.ப.கிருஷ்ணன்

இ.பி.எஸ்-ஐ , ஒ.பி.எஸ் சந்திக்க வாய்ப்பிருப்பதாவும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ்  உடன் ஓ.பி.எஸ் சந்திப்பு?  அரசியலில் எதுவும் நடக்கலாம் ;கு.ப.கிருஷ்ணன்

இ.பி.எஸ்-ஐ , ஒ.பி.எஸ் சந்திக்க வாய்ப்பிருப்பதாவும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று  ஓ.பி.எஸ் ஆதரவாளர்  கு.ப. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக கு.ப. கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது” நாங்கள் அனைவரும் ஓ.பி.எஸ் உள்பட இரட்டை இலை வெற்றிக்காக பாடுபடுவோம். மாப்பிளைக்கு திறந்த மனம் இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார். இருவரும் சேர்த்து பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ”போதிய அவகாசமில்லை, அவரவர் தேவைக்கு ஏற்ப தனியாக பிரச்சாரம் செய்வார்கள். இரட்டை இலை வேண்டும் என்று இ.பி.எஸ் நினைத்தார். ஆனால் அந்த உரிமையை தமிழ்மகன் உசைனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த தேர்தலுக்கு மட்டும்தான் இந்த தீர்ப்பு.

இரட்டை இலையால்தான் நான் அமைச்சரானேன்.  அதிமுக தலைமையே இ.பி.எஸ் வேட்பாளர் பக்கம் இருப்பதால் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கிறோம். பிரச்சாரத்தின்போது, இ.பி.எஸ் வேட்பாளர் புகைப்படம் இடம் பெறுமா என்று பத்திரிக்கையாளர் கேட்டபோது, இரட்டை இலை என்ற சின்னத்தை மட்டுமே வைத்துகொண்டு எந்த கிராமத்திற்கு போனலும், அது அதிமுக என்று தெரியும். அதிமுகவை அறிமுகப்படுத்தியதே இரட்டை இலைதான் என்று கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps can meet ops says ops side former minister