/tamil-ie/media/media_files/uploads/2017/06/TN-Assembly.jpg)
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியையும் அங்கீகரிக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் எம். அப்பாவுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சி துணைத் தலைவரை சட்டசபை விதிகள் அங்கீகரிக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் மனுவில், 2021 தேர்தலுக்குப் பிறகு அதிமுக 66 உறுப்பினர்களுடன் சட்டப் பேரவைக்குள் நுழைந்தது. ஆளும் தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சட்டமன்றக் கட்சியாக திகழ்கின்றது.
இந்தக் குழப்பத்துக்கு அதிமுகவின் உள்கட்சி பிரச்னையை காரணம். முதலில் முன்மொழியப்பட்ட போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், ஆலங்குளம் தொகுதி பி.ஹெச். பாண்டியன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையால் அதிமுக முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து, “இந்த முடிவு ஜூலை 19, 2022 அன்று சட்டசபை சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல்களுக்கு சபாநாயகர் பதிலளிக்கவில்லை என்றும், சட்டசபை அரங்கில் இருக்கை அமைப்பை மாற்றத் தவறியதாகவும் மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளியேற்றப்பட்ட 3 உறுப்பினர்களும் அதிமுக எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து அமர்வதாகவும், முக்கிய எதிர்க்கட்சியின் தனிப்பட்ட விவாதங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாகவும் கூறிய மனுதாரர், சபாநாயகரின் தயக்கத்தால் அவையில் திறம்பட செயல்பட முடியவில்லை. இருக்கை அமைப்பை மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.