‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் ‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகிறது என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பதாகைகள் நிறுவியது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து விவரங்கள் பெறப்பட்டது. அச்சடிக்கும் பணியில் எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை . மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல். பதாகைகள் நிறுவிட, பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது தவறானது. சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் ரூ.611 (சரக்கு, சேவை கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது.” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"