/tamil-ie/media/media_files/uploads/2022/07/Edappadi-K-Planiswami.jpg)
எடப்பாடி பழனிசாமி
EPS fainted at ADMK protest stage in Chennai: மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து நடைபெற்ற அ.தி.மு.க போராட்டத்தின்போது, மேடையில் இருந்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம் நடத்தி வருகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, பொன்னையன், ஜெயக்குமார், தங்கமணி, வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
இதையும் படியுங்கள்: மேகதாது அணையால் தமிழ்நாடு பாதிக்காது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது, தி.மு.க அரசுக்கு எதிராகவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி சுமார் அரை மணி நேரம் இ.பி.எஸ் உரையாற்றினார். பின்னர் மற்ற தலைவர்கள் உரையாற்றி வந்தனர். இந்த நிலையில், ஆர்ப்பாட்ட மேடையில் நின்றுகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், மேடையில் இருந்த இருக்கையில் அவர் அமர வைக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து மேடையில் இருந்த இருக்கையில் அமரவைத்தனர்.
கடுமையான வெயில் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு லேசான தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு பின் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததையடுத்து இ.பி.எஸ் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.