திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் சுமார் 4000 சதுர அடியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 6) காலை திருச்சி வந்தார்.
Advertisment
அவரை அ.தி.மு.க முன்னாள் எம்.பி.க்கள் ப.குமார்,ரத்தினவேல், திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அளிக்க அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் வந்தார். அப்போது அவர் அருகில் இருந்த முதியவர் அந்த நிர்வாகியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை திருடியுள்ளார்.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்த நிலையில் முதியவரை கையும் களவுமாக பிடித்தனர். உடனடியாக அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த பரிசை கொடுத்துவிட்டு நிர்வாகிகளை கையெடுத்து கும்பிட்டு என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றார். முன்னாள் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் பர்சை திருடிய சம்பவம் சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“