சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கூண்டோடு நீக்கம்; இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி நடவடிக்கை

சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுக நிர்வாகிகள் 15 பேர்களையும் கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கி அதிகமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

aiadmk, 15 aiadmk cadres sacked from aiadmk, sasikala audio, அதிமுக நிர்வாகிகள் நீக்கம், அதிமுக, சசிகலா ஆடியோ, ஓபிஎஸ், இபிஎஸ், tamil nadu govt, ops, eps, sasikala

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா அண்மையில், அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சசிகலாவிடம் போனில் பேசிய அதிமுகவினர் 15 பேர்களையும் கூண்டோடு நீக்கி அதிமுகவின் இரட்டைத் தலைமை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவரும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியை ஆட்சியையும் கைப்பற்ற முயன்ற ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஓ.பி.எஸ் தர்மயுத்தத்தால் சிக்கலானது. சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பால் அது முழுவதுமாக தடைபட்டுப்போனது. சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பிறகு, இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இணைந்தனர். அதிமுகவின் இரட்டைத் தலைமை ஆனார்கள். சசிகலாவையும் அவரது குடும்பத்திரனரையும் வெளியேற்றினார்கள். சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கி நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக தண்டனைக் காலம் முடிந்து விடுதலை ஆன சசிகலா, தேர்தலில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி ஓய்வு எடுப்பதாக தெரிவித்தார். சசிகலாவின் ஆதரவு இல்லாததால் அமமுக படுதோல்வியடைந்தது.

தேர்தலில், அதிமுக தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. இ.பி.எஸ் எதிர்க்கட்சி தலைவராகவும் ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில்தான், கடந்த சில வாரங்களாக சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் போனில் பேசிய ஆடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். அதிமுக நிர்வாகிகளிடம் போனில் பேசிய சசிகலா, தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி இப்படி வீணாகப் போய்விடக் கூடாது. எல்லோரும் தைரியமாக இருங்கள். கட்சியை விரைவில் சரி பண்ணிடலாம் என்று பேசியுள்ளார். சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் போனில் பேசிய ஆடியோக்களை சமூக உடகங்களில் வெளியிட்டும் வருகிறார். இது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த வாரம் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை. கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகிறார். ஆனால், அது நடக்காது என்று கூறினார்.

சசிகலா தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு வந்தாலும், சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் மீது அதிமுக தலைமை எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான், அதிமுக இரட்டைத் தலைமை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும், அதிமுகவில் இருந்து சசிகலாவிடம் போனில் பேசிய 15 நிர்வாகிகளை கூண்டோடு நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கீழ் கண்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற்அத் தலைவர்)

ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே.சின்னசாமி (முன்னாள் எம்.பி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர்)

வேலூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.கே.எம்.பி வாசு (அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற்அ துணைச் செயலாளர்)

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோமாத்தூர் ஆ.சுப்பிரமணியம் (அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்)

I. வின்செண்ட் ராஜா, (மாவட்ட எம்.ஜி.அர் இளைஞர் மன்ற துணை செயலாளர்)

பருத்தியூர் கே.எம்.கே நடராஜன், (மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்)

திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.அருள்ஜோதி, (மாவட்ட அதிமுக துணைச் செயலாளர்)

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டி.சுகாதா ஹர்ஷினி (மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்)

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அம்மா எஸ்.சிஆ (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்)

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பில்மூர் ராபர்ட், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்)

தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி பாண்டியன் (129-வது புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் விருகம்பாக்கம் வடக்கு பகுதி)

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த இ.ராஜேஷ்சிங் (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)

ஒட்டக்காரன் என்.ராஜூ (சேப்பாக்கம் வடக்கு பகுதி மாணவர் அணித் தலைவர்)

என். சதீஷ் (எ) கண்ணா (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர், 62 தெற்கு vஅட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்)

மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி. ராமசந்திரன், (மதுரை வடக்கு 3-ஆம் பகுதிக் கழக துணைச் செயலாளர்)

ஆகியொர் இன்று (ஜூன் 14) முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைகப்படுகிறார்கள் அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுடன் போனில் பேசிய அதிமுகவில் நிர்வாகிகள் 15 பேர்களையும் கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கி அதிகமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Eps ops action against 15 aiadmk cadres sacked for talking to sasikala on phone

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com