சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்.
அதிமுக ஆட்சி காலத்தில், 2020 ஜூலை 20ஆம் தேதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கீழடி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கீழடி என் தாய்மடி எனும் பெயருடன் அகழ்வாய்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/30/eps-kizhadi-2025-07-30-13-59-35.jpg)
அதற்கு முன், 2015 முதல் 2017 வரை மத்திய தொல்லியல் துறை மூன்று கட்டங்களாக அகழாய்வை முன்னெடுத்தது. அதன் பின்னர், 2018 முதல் மாநில தொல்லியல் துறை ஏழு கட்டங்களாக அகழ்வுப் பணிகளை மேற்கொண்டது. இதுவரை மொத்தமாக 10 கட்டங்களாக அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/30/eps-kizhadi-1-2025-07-30-13-59-35.jpg)
தமிழகத்தில் நடைபெற்ற 39 அகழாய்வில் 33 அகழாய்வு அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்றும்
ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் மத்திய தொல்லியல் துறை என்ன விளக்கங்கள் கேட்டுள்ளது என்பது தெரியவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு என்ன கேட்டது என்பது தெரிந்தால் தான் அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்க முடியும் என்றார். 2023 மார்ச் 5ஆம் தேதி, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.