இ.பி.எஸ் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடத்தப்பட்டதால் இ.பி.எஸ் மற்றும் மற்ற அதிமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிமுகவில் இரட்டை தலைமை சிக்கலால் இரு அணிகளாக கட்சி பிரிந்திருக்கிறது. உண்மையான அதிமுக யார் என்பது பெரும் குழப்பத்தில் இருக்கும் இந்த நேரத்தில் நேற்று சட்டமன்றம் கூடியது. இதில் எதிர் கட்சித் துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் எடப்பாடி பழனிசாமி அணியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதை கண்டித்து இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி , ஜெயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.