Advertisment

ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது – இ.பி.எஸ் தரப்பு வாதம்

யூகங்கள் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டும்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இனி இணைந்து செயல்பட முடியாது – அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் இ.பி.எஸ் தரப்பு வாதம்

author-image
WebDesk
New Update
AIADMK, AIADMK general council meeting case, ops vs eps, o panneerselvam, edappadi palaniswami, அதிமுக பொதுக்குழு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றம், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, chennai high court, AIADMK general committee case today judgement

EPS said can’t work with OPS, to Chennai high court on ADMK case: கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகேட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். மேலும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisment

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்: மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

அப்போது இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பொதுக்குழு தொடர்பாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார், யூகங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளார், அதிகாரம் பெற்றவர்களால் பொதுக்குழு கூட்டப்படவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது என்று வாதாடினார்.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தனி நீதிபதி ஜெயசந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். 1.5 கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல. கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை, ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.

2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 23 ஆம் தேதி, அடுத்த பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யவும் ஆதரவு தெரிவித்தனர். இதில் இ.பி.எஸ்-க்கு ஆதரவு உள்ளது நிரூபணமாகியுள்ளது.

பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் பெற்றது. எனவே ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இல்லை என கூற முடியாது. ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், கோரப்படாத நிவாரணத்தை வழங்கியது அசாதாரணமான உத்தரவு.

அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனிநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. 2,539 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர்.

பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக்கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும். உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். தனி நீதிபதி உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்பட முடியாத நிலை உள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில், வழக்கு கோரிக்கையை மீறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார்.

பின்னர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இனி இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள். இருவரும் இணைந்து செயல்படுவது என்பது முடியாது. அப்படி இணைந்தால், கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது. பின்னர் எப்படி இருவரும் இணைந்து செயல்பட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைத்து செயல்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

கூட்டம் நடத்த கூடாது என ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், இருவரும் இணைந்து கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. தனி உத்தரவு நீதிபதி கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதாடினார்.

பின்னர் என்று இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கவில்லை என்பது தவறு, ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவிலேயே  அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை உறுப்பினர்கள் கோரிக்கையாக கருத வேண்டும் என வாதாடினார்.

மேலும், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்கள் மேலானவர்கள் அல்ல. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க தான். இதுதொடர்பான விதிகளை கொண்டுவருவதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருந்தார், என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment