அதிமுக ஆட்சியில் மழைக்காலங்களில் மக்கள் தூக்கம் தொலைத்ததாகவும் தி.மு.க ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வீட்டில் இருப்பதாகவும் பேசப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
“சேலம் மாநகர மக்கள் இரவில் தூங்கிக் கொண்டே வா இருந்தார்கள்? எப்போது வீட்டிற்குள் தண்ணீர் போகும் என்ற அச்சத்தில் தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலைமை தான் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கின்றது” என்றார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் பார்வையிட்ட முதலமைச்சர் தூக்கத்தை தொலைத்த ஆட்சி அதிமுக என்றும் கூறியிருந்தார், அதை எதிர்க்கிறேன் என்று இபிஎஸ் கூறினார்.
நான் கேட்கிறேன் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்காததால் விழுப்புரம், கடலூர் மற்றும் பல்வேறு மாவட்ட மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் இருக்கிறார்கள் மக்களின் தூக்கத்தை தொலைத்த அரசு இந்த திமுக அரசு என்று கூறினார்.
மேலும் அவரது சமூக வலைத்தள பதிவையும் குறிப்பிட்டு பேசினார். மேலும் முதல்வர் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இது மாதிரியான சேதங்களுக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“