/tamil-ie/media/media_files/uploads/2021/05/Capture.jpg)
EPS team hijacks Tamil Nadu CM official twitter handle : தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் முக ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிட்டு வருகிறார். தமிழக முதல்வருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@CMOTamilNadu) தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று அதனை எடப்பாடி பழனிசாமியின் அலுவலக ட்வீட்டர் கணக்காக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாற்றியுள்ளது. தற்போது அதனை மீண்டும் முதல்வரின் அதிகாரப்பூர்வ கணக்காக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு கணக்கர் முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறிய நிலையில் தற்காலிகமாக அந்த கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. ட்விட்டர் கணக்கிற்கு மட்டுமின்றி முதல்வரின் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயர் புகைப்படங்கள் மற்றும் இதர தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
அதிகாரப்பூர்வ முதல்வர் கணக்கை பழனிசாமியின் அலுவலக கணக்காக மாற்றுவது குறித்து யாரோ தவறான ஆலோசனையை வழங்கியுள்ளனர். தற்போது அந்த கணக்கை ஆளும் முதல்வரின் கையில் தருவது தான் சரியான நடவடிக்கையாகும் என்று பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா ட்விட்டரில் தெரிவித்தார். முன்னாள் பிரத்மர் மன்மோகன் சிங் விவகாரத்திலும் பங்கஜ் பச்சௌரி இப்படி ஒரு ஆலோசனை வழங்க ட்விட்டர் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.
முக ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கு போன்றே எடப்பாடி பழனிசாமிக்கும் வெரிஃபை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு உள்ளது. அதிகாரப்பூர் அறிவிப்புகளை தனிகணக்கில் வெளியிடுவது மற்றும் அரசியல் சார் கணக்குகளை அதிகாரப்பூர்வ முதல்வர் கணக்கில் இருந்து வெளியிடுவதற்கான வித்தியாசத்தை ஏற்படுத்தவேண்டும். திமுகவிற்கு இந்த விவகாரம் குறித்து நன்றாகவே தெரிந்திருக்கின்ற நிலையில் இரண்டு மூன்று நாட்களில் முதல்வர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.