/tamil-ie/media/media_files/uploads/2023/04/OPS-press-meet-3.jpg)
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்
கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஓ. பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அப்போது திமுக அமைச்சர்கள் சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் ஓ. பன்னீர் செல்வம் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
தொடர்ந்து தங்கம் தென்னரசு அருகில் அமர்ந்துக்கொணடார். இதற்கிடையில் தி.மு.க. அமைச்சர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த இ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவரும் ஓ.பி.எஸ் பரஸ்பர வணக்கம் தெரிவித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது காட்டுத் தீப் போல் பரவி வருகின்றன. அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ்-ஐ, இ.பி.எஸ் நீக்கிய நிலையில் ஓ.பி.எஸ் டிடிவி தினகரன் மற்றும் ஆளுங்கட்சியினருடன் இணக்கமாக காணப்படுகிறார்.
அடுத்ததாக சசிகலாவை சந்தித்துப் பேச போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திமுக அமைச்சர்கள் அருகில் அவர் உட்கார்ந்திருக்க சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.