அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக்கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
வேலூர், அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறார் கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், மாவட்ட எஸ்.பி. 3 நாட்களில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் ரகளையில் ஈடுபட்டதாக 12 சிறார் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இல்ல பாதுகாப்பு கண்காணிப்பாளர் அளித்த புகாரில் 12 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என இ.பி.எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை என விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பா.ஜ.க தான். 2 மக்களவைத் தொகுதிகளுடன் தொடங்கிய பயணம் தற்போது 303 இடங்களை எட்டியிருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 20 மாநிலங்களீல் 76 நிறுவனங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்தார்.
ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் ஹரீஷ் மற்றும் மாலதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; ஹரீஷை 4 நாட்களும் மாலதியை 1 நாளும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.
சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; வாணியம்பாடி திருவாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ட்வீட் செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஓ.பி.எஸ்ஸின் இரண்டு வாதங்களை நிராகரித்துவிட்டார்.
அந்த வாதங்கள், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மற்றொன்று கட்சியின் சீர்திருத்தங்கள் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும் என்பதே ஆகும்.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி உறுதியானது. இந்நிலையில், “தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக இல்லை. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம்” என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்பது உறுதியானது.
இந்த நிலையில் தனது ட்விட்டர் தளத்தில் பயோபிக்கை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என மாற்றியுள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி!
தொண்டர்களின் தொண்டரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. ்பாடியார் அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, எனக்கும் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. (2/2)
— SP Velumani (@SPVelumanicbe) March 28, 2023
ட்விட்டரில் #edappadipalaniswami, எடப்பாடியார் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
புதிய உறுப்பினர்: இ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. புதிய உறுப்பினர் விண்ணப்பம் படிவங்கள் விநியோகம். pic.twitter.com/O4dufKDQQX
— AIADMK (@AIADMKOfficial) March 28, 2023
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும்; தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இபிஎஸ் தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரியான பாஜக-வை அ.தி.மு.க தூக்கி சுமப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற மிகப்பெரும் துரோகம் – தொல்.திருமாவளவன் பேட்டி
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களுக்கு பாமக சார்பில் வாழ்த்துகள்- அன்புமணி ராமதாஸ் ட்வீட்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானம் பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்
எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால், தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது – நீதிபதி குமேரேஷ் பாபு
அதிமுகவின் 8வது பொதுச்செயலாளராக அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக இபிஎஸ் தேர்வு என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக என்கிற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ், அவருக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை; உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்ந்து அங்கம் வகிக்கிறது; பாஜக அமமுக-வை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒரு போதும் நடக்காது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இ.பி.எஸ்-க்கு தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ் அணிவித்த தொண்டர்கள். எம்.ஜி.ஆர் தோற்றத்தில் எடப்பாடி பழனிசாமி
'அதிமுக பொதுச்செயலாளர்' என தனது ட்விட்டர் சுயவிவரக் குறிப்பில் மாற்றம் செய்தார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் ஈபிஎஸ் மரியாதை
அதிமுக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட 150 கிலோ லட்டு. தொண்டர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலிமையாக இயங்கும்
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்புக்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேட்டி
அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி – அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் ஈபிஎஸ் பேட்டி
அ.தி.மு.கவில் உள்ள தொண்டர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் – இ.பி.எஸ் பேட்டி
நீதிமன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களில், அதிமுக அலுவலகம் சென்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி
பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஈபிஎஸ்ஸிடம் வழங்கினர்
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி
பொதுச்செயலாளர் ஆனதன் மூலம், அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு. நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல்.
ஓ.பி.எஸ் மனுக்கள் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும்: நீதிமன்றம்
சென்னை, அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் . அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என தீர்ப்பு வந்த நிலையில் இ. பி. எஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பார். மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இ.பி.எஸ் இருப்பார் என்பது இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு. பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு. சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
ஓ.பி,எஸ் முதலில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மேலும் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என்பதையும் அவரது மனுவில் இணைத்து கொண்டார். இதை கடந்த மார்ச் 25 மற்றும் 26 தேதிகளில் எழுத்துபூர்வ வாதமாக முன்வைத்தார்.
பொதுக்குழுவை எதிர்த்து ஓ. பி. எஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியபோது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தியது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது, இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.