அ.தி.மு.க.வின் தனிப் பெரும் தலைவராக எழுச்சி பெறுவதற்கான மற்றொரு போரில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அவரை அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளராக தொடர அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, செப்டம்பர் 2, 2022-ல் சென்னை உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்தது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக ஒற்றைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படார். இந்த கூட்டத்தில், கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது சில ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
டிசம்பர், 2016-ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து அ.தி.மு.க-வைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராடி வரும் 72 வயதான ஓ. பன்னீர்செல்வம் பாதை முடிந்துவிட்டதாகப் பார்க்கத் தேவையில்லை. பொதுக்குழு கூட்டத்தில் செல்வாக்கை இழந்த பிறகு ஓ.பி.எஸ் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார். ஓ.பி.எஸ் 3 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் நின்றார். மீதமுள்ள 63 எம்.எல்.ஏ.க்கள், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2,200 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, வி.கே சசிகலா ஆகியோர் வகித்த பொதுச் செயலாளர் பதவியை அளிக்க இ.பி.எஸ்-க்கு ஆதரவளித்தனர்.
இதன் மூலம், ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் பதவி வகித்து வந்தது முடிவுக்கு வந்தது.
2017-ல் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்தபோது, அப்போது ஓ.பி.எஸ்-க்கு பின்னால் 11 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்ததாக நம்பப்பட்டது. அ.தி.மு.க ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் கட்சிக்குள் மூக்கை நுழைத்த பா.ஜ.க ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளிக்கப்பட்டது. அதன்படி, துணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ் பெற்றிருந்தார்.
இதற்கிடையில், முதல்வராக இருந்த இ.பி.எஸ், பலம் பெற்று, கட்சியை தன் பக்கம் கொண்டு வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய சசிகலாவை ஒரு பக்கம் ஒதுக்கி வந்தார். இ.பி.எஸ் திறமையான முதல்வராகவும் நிர்வாகியாகவும் காணப்பட்டார். இது 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் தோல்வியடைந்த பிறகும் அவரைத் தக்கவைக்க உதவியது.
இதற்கு மாறாக, ஓ.பி.எஸ், பா.ஜ.க-வுடனான தனது தொடர்பை ஒருபோதும் உதறாமல் வைத்திருந்தார். இதைக் குறிப்பிட்டு, தி.மு.க விமர்சனம் செய்ததால் அவரை கடுமையாக காயப்படுத்தியது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து வருகிறது. ஓ.பி.எஸ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எஸ். குருமூர்த்திக்கும், பின்னர் சசிகலாவுக்கும் நெருக்கமானவராகவும் காணப்பட்டார்.
முதலில் தனது ஆலோசனையின் பேரில், சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் கிளர்ச்சி செய்ததாக குருமூர்த்தி ஒருமுறை கூறினார். மேலும், உத்வேகத்திற்காக ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லுமாறு ஓ.பி.எஸ்-ஸிடம் கூறியதாகவும் கூறினார்.
அ.தி.மு.க-விற்குள் கணிசமான செல்வாக்கு செலுத்தி வரும் சசிகலா அ.தி.மு.க-வை கைப்பற்றுவதற்கான கடுமையான போரில் எச்சரிக்கையாக இருப்பதால் ஓ.பி.எஸ்-ஸிடம் இருந்து விலகி இருக்கலாம். ஓ.பி.எஸ் தலைவராக ஒரு புதிய கட்சி தொடங்க முடியாது. அவருக்கு செல்வாக்கோ அல்லது பேரம் பேசும் சக்தி இல்லை” என்று முன்னாள் அ.தி.மு.க எம்.பி ஒருவர் கூறினார்.
இந்த பண்புகளே ஒரு காலத்தில் கட்சியில் ஓ.பி.எஸ்-ன் எழுச்சியை தூண்டியது. சசிகலா குடும்பத்துடனான தொடர்பின் மூலம் அ.தி.மு.க-வுக்கு முதலில் வந்தார். 1990-களில், ஓ.பி.எஸ்-ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில், அவர் நகராட்சித் தலைவராக இருந்தபோது சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் போட்டியிட்டபோது, ஓ.பி.எஸ் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது.
2001-ம் ஆண்டு ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, டான்சி வழக்கை அடுத்து முதல்வர் பதவியில் இருந்து விலகியதால் ஜெயலலிதா ஓ.பி.எஸ்-ஸை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார். 2014-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் முதல்வராக தேர்வானார். எப்பொழுதும் சண்டை இல்லாமல் அரசியலில் அமைதியாக தனித்துவமானவர் என்று அந்த நேரத்தில் ஜெயலலிதா அவரைப் பாராட்டினார்.
முதல்வர் ஆனது போன்ற வாய்ப்புகள் தனது வாழ்க்கையில் கிடைத்த அதிர்ஷ்டம் என்று கருதுவதாக ஓ.பி.எஸ் பணிவுடன் பதிலளித்தார்.
நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016 டிசம்பரில் இறந்தபோது ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தார். அப்போது தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவுக்கு எதிராக அவர் கிளர்ச்சி செய்ததால் அவரது பதவி பறிபோனது. அவருக்குப் பதிலாக சசிகலா தனது மற்றொரு விசுவாசியான இ.பி.எஸ்-ஸை முதல்வரக நியமித்தார்.
2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சசிகலாவை பதவி நீக்கம் செய்ய இருவரும் ஒன்றிணைந்தனர். ஊழல் குற்றச்சாட்டில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அவரை இந்த விவகாரத்தில் இருந்து வெளியேற்றியது.
ஓ.பி.எஸ் அளவுக்கு இ.பி.எஸ் அறியப்படாத நிலையில், குறிப்பாக தமிழகத்திற்கு வெளியே, அவர் எதிர்பாராத வெற்றியாளர் என்பதை நிரூபித்தார். மேற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி, கட்சியைக் கையாள்வது, பேரணிகளின் போது மக்களைத் திரட்டுவது. தேர்தலில் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அவரது திறமை ஓ.பி.எஸ்-ஸைவிட சிறந்தது. கடவுள் பக்தி கொண்டவர், மக்களிடம் நல்லவராகப் பார்க்கப்படுகிறார்.
இ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அவர் பேசுபவராக இருந்தாலும், அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்: “இ.பிஎ.ஸ் அடிபணியவில்லை. ஓ.பி.எஸ். போல இல்லை. பா.ஜ.க-விடம் பேசுகிறார். அவர்களிடம் ஆலோசனை’ கேட்கவில்லை. தேவைப்பட்டால் 2024 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் வகையில் அ.தி.மு.க-வை மீட்க அவர் விரும்புகிறார்.
சமீபத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாமல் பின்வாங்குவதற்கு ஓ.பி.எஸ்-ஐ பா.ஜ.க சமாதானப்படுத்தியபோது இ.பி.எஸ் மற்றொரு வெற்றியைப் பெற்றார். தற்போது அ.தி.மு.க வேட்பாளர் இ.பி.எஸ் வேட்பாளர் மட்டுமே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் களத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“