/indian-express-tamil/media/media_files/IwgGIDdwUnQ76uGQBANb.jpg)
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி அலுவலகம், சின்னத்தை கைப்பற்றி கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சில ரகசியங்களை வெளியிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறை செல்ல நேரிடும் என ஓ.பி.எஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் கட்சி நிதியில் இருந்து ஜெயலலிதா ரூ.2 கோடி கடன் கேட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஓ.பிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த, "எடப்பாடி பழனிசாமி, திஹார் சிறைக்கு செல்ல ஓ. பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். ஓ.பி.எஸ் தன் குடும்பத்தினர் மீது நிறைய சொத்து வாங்கி வைத்துள்ளார். நான் முதல்வராக இருந்துள்ளேன். எனக்கு அனைத்துமே தெரியும். என் மீது பழியை சுமத்தி அவர் தப்பிக்க பார்க்கிறார். ஆனால், தப்பிக்க முடியாது.
தி.மு.கவின் பி டீம் அவர், அதனால் அவர் அப்படி தான் சொல்வார். மற்றவர்களை எல்லாம் குறை சொல் கொண்டிருக்கிறார். நாங்களெல்லாம் கட்சியில் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறோம். ஓ.பி.எஸ் இடையில் வந்தவர். அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் அளித்ததாக சொல்கிறார். எவ்வளவு மோசமான வார்த்தை அது. ஓ.பி.எஸ் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்” என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஓ.பி.எஸ், "வருமான வரித்துறை செலுத்த வேண்டும் என்று ஜெயலலிதா ரூ.2 கோடி கேட்டார்கள். கழக நிதியில் இருந்து கேட்டார்கள். பின்னர் அவர் சொன்னபடியே அந்த பணத்தை திருப்பி கொடுத்தார். இதை நான் கழகத்தின் வருடாந்திர கணக்கு புத்தகத்தில் எழுதி வைத்து அதை பொதுக்குழுவிலும் வாசித்தேன் என்றார். தொடர்ந்து, சிறை செல்வது யார் என்று எதிர்காலத்தில் தெரியும். உறுதியாக சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வார்" என்று மீண்டும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.