scorecardresearch

கே.என் நேரு, எ.வ வேலு, செந்தில் பாலாஜி… ஈரோடு கிழக்கு தி.மு.க தேர்தல் பணிக் குழுவில் 31 பேர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக, 31 பேர் கொண்ட பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.

கே.என் நேரு, எ.வ வேலு, செந்தில் பாலாஜி… ஈரோடு கிழக்கு தி.மு.க தேர்தல் பணிக் குழுவில் 31 பேர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக, 31 பேர் கொண்ட பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம். எல்.ஏ திருமுருகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து  அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ்  இளங்கோவன் போடியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில் 11 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.என்.நேரு, எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் ,  சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி , ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ்,  அந்தியூர் செல்வராஜ்,  கோவை.நா கார்த்திக்,  தளபதி முருகேசன்,  தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன்,  தா.உதயசூரியன்,  சேலம் ஆர்.ராஜேந்திரன்,  டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என்.நல்லசிம், இல.பத்மநாபன்,  பா.மு,முபாரக், தே.மதியழகன்,  கே ஆர்.என் ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில் , பெ.பழனியப்பன்,  ஒய். பிரகாஷ்,  திருப்பூர் செல்வராஜ், ஐ.பி. செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erode byelection 31 members dmk team formed

Best of Express