/indian-express-tamil/media/media_files/2025/02/08/EAogC4DPXQ7yUaQr23Qp.jpg)
Erode By poll Election Results Live Updates:
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.
-
Feb 08, 2025 21:33 IST
நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் ஈரோடு கிழக்கு வெற்றி: மு.க.ஸ்டாலின்
மகத்தான திட்டங்களை தரும் திமுக அரசுக்கு, ஈரோடு கிழக்கு மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடியது. தேர்தல்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாத அதிமுக, மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.எங்களது நன்றியின் அடையாளமாக, வாக்களித்த மக்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம் ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த உழைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 08, 2025 21:30 IST
ஓய்வில்லா உழைப்புக்கு மக்கள் அளித்திருக்கும் ஊக்கமே இந்த வெற்றி: உதயநிதி ஸ்டாலின்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் கழகம் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட_மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்தி இருக்கிறது. ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஓய்வில்லா உழைப்புக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் ஊக்கமே இந்த வெற்றி! களத்திற்கு வரும் முன்னே முடிவினை உணர்ந்து, ஒதுங்கி ஓடிய பாசிஸ்ட்டுகளும் - அடிமைகளும் இனிமேலாவது பொய்ப் பிரசாரத்தையும் அவதூறு அரசியலையும் கைவிடுவது நல்லது என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
Feb 08, 2025 19:18 IST
திமுக போலி வெற்றி அடைந்துள்ளது: ஈபிஎஸ் விமர்சனம்
ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுகவினர் ஓட்டுக்களை கள்ளத்தனமாக போட்டு திமுக போலி வெற்றி அடைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்.
-
Feb 08, 2025 17:28 IST
தி.மு.க வேட்பாளர் வெற்றி; டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்தார். டெபாசிட் தொகையை பெற 25,777 வாக்குகள் வேண்டிய நிலையில் 23,872 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்
-
Feb 08, 2025 17:03 IST
தி.மு.க வேட்பாளர் 96,450 வாக்குகள் பெற்று முன்னிலை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 96,450 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 20,384 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்
-
Feb 08, 2025 16:00 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் 83,191 வாக்குகள் பெற்று முன்னிலை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 83,191 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 17679 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்
-
Feb 08, 2025 14:59 IST
ஈரோடு கிழக்கு முன்னிலை நிலவரம்
11வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவான நிலையில் திமுக 59,731 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
-
Feb 08, 2025 14:28 IST
ஈரோடு தேர்தல் - 10 வது சுற்று நிலவரம்
நடந்து முடிந்த 10 வது சுற்றில் திமுக 63,984 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.
-
Feb 08, 2025 14:03 IST
நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் - சந்திரகுமார்
நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை, அஞ்சுவதில்லை, என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
Feb 08, 2025 13:56 IST
முழக்கத்துடன் வெற்றியை கொண்டாடிய திமுகவினர்
“தந்தை பெரியார் வாழ்க” என்ற முழக்கத்துடன் ஈரோடு கிழக்கு வெற்றியை கொண்டாடுகின்றனர் திமுகவினர்.
-
Feb 08, 2025 13:44 IST
9வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு
9 வது சுற்று நிறைவு பெற்ற நிலையில் 48 ,307 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மீண்டும் முன்னிலையில் உள்ளது.
-
Feb 08, 2025 13:32 IST
அறிவாலயத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க முன்னிலையில் உள்ள நிலவரத்தை கொண்டாடும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு தொண்டர்கள் இனிப்பு வழங்கி ஆரவாரமாக தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
Feb 08, 2025 13:16 IST
எட்டாவது சுற்று முடிவு - திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 8 வது சுற்றின் முடிவில் திமுக 44,887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
-
Feb 08, 2025 12:57 IST
`"சீமான் ஓவரா பேசிட்டாரோ'' - அண்ணாமலை
``பெரியார் பற்றிய கருத்துகளுக்கு ஓட்டை மாற்றி போட வைக்கும் சக்தி இல்லை. அதை ஈரோடு முடிவுகளும் உணர்த்தியுள்ளன. ஆனாலும் சீமான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டாரோ என தோன்றுகிறது. அது ஒரு மாதிரி ஆபாசமாகவும் போய்விட்டது'' என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
-
Feb 08, 2025 12:47 IST
ஈரோடு கிழக்கு முன்னிலை நிலவரம்
34,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
-
Feb 08, 2025 12:28 IST
NOTA வாக்குகள் அதிகரிப்பு
ஈரோடு கிழக்கில் கடந்த இடைத்தேர்தலில் NOTA, 798 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் தற்போது 5வது சுற்று முடிவிலேயே கிட்டத்தட்ட இரு மடங்காக 1,584 வாக்குகளை பெற்றுள்ளது.
-
Feb 08, 2025 12:22 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தி.மு.க முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க முன்னிலையில் இருப்பதால் அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
-
Feb 08, 2025 12:18 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முன்னிலை விவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 32,684 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.
-
Feb 08, 2025 11:55 IST
5-வது சுற்று முடிவு
வாக்கு எண்ணிக்கையின் 5-வது சுற்று முடிவில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 37,001 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் 7,668 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் 29, 333 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது.
-
Feb 08, 2025 11:30 IST
2-வது சுற்றில் 80.54% வாக்குகளை பெற்ற தி.மு.க
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது சுற்று முடியில், தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 80.54% வாக்குகளை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 08, 2025 11:12 IST
24,864 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை
11 மணி நிலவரப்படி, 24,864 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 5,934 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 30,798 வாக்குகள் பெற்றுள்ளார்.
-
Feb 08, 2025 10:53 IST
தி.மு.க வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், மூன்றாவது சுற்று நடைபெற்று வருகிறது. தற்போது வரை தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 28,424 வாக்குகள் பெற்றுள்ளார். நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 4,050 வாக்குகளை பெற்றுள்ளார். அதன்படி, 24,374 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார்.
-
Feb 08, 2025 10:14 IST
சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், இரண்டு சுற்று முடிவுகளின் படி, 20,437 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. இதில், தி.மு.க வேட்பாளர் சந்திர குமார் 23,227 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 2,790 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
-
Feb 08, 2025 09:55 IST
2வது சுற்றிலும் தி.மு.க முன்னிலை
இரண்டாவது சுற்றின் முடிவிலும் தி.மு.க வேட்பாளர் சந்திர குமார் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அந்த வகையில் 18,873 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். மறுபுறம், நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 2,234 வாக்குகள் பெற்றுள்ளார்.
-
Feb 08, 2025 09:40 IST
6951 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது சுற்று முடிவில், தி.மு.க 6951 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி, தி.மு.க வேட்பாளர் சந்திர குமார் 8963 வாக்குகளும், நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 2012 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
-
Feb 08, 2025 09:09 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில், தி.மு.க வேட்பாளர் சந்திர குமார் 6880 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதன்படி, முதல் சுற்றில் அவர் 7961 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி முதல் சுற்று முடிவில் 1081 வாக்குகள் பெற்றுள்ளார்.
-
Feb 08, 2025 08:59 IST
தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தி.மு.க
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், தி.மு.க வேட்பாளர் சந்திர குமார் 7955 வாக்குகள் பெற்றுள்ளார். நா.த.க வேட்பாளர் 981 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் தி.மு.க வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
-
Feb 08, 2025 08:52 IST
முதல் சுற்றில் தி.மு.க முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார். இவர் 2586 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், நா.த.க வேட்பாளர் 391 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
-
Feb 08, 2025 08:43 IST
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 8:30 மணி நிலவரப்படி தபால் வாக்குகளில், தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார். மின்னணு வாக்குகள் அடுத்தகட்டமாக எண்ணப்படவுள்ளன.
-
Feb 08, 2025 08:18 IST
தபால் வாக்குகளில் தி.மு.க முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தபால் வாக்குகளில் தி.மு.க முன்னிலை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8:30 மணி முதல் மின்னணு வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Feb 08, 2025 08:08 IST
வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கியது. அதன்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில், தி.மு.க, நா.த.க உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Feb 08, 2025 07:36 IST
மிக பெரிய வெற்றி பெறுவோம் - தி.மு.க வேட்பாளர் சந்திர குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என தி.மு.க வேட்பாளர் சந்திர குமார் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் செய்த நலத்திட்ட உதவிகளின் மூலம் பெரும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 08, 2025 06:35 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், 8:30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்படும் என அறிவிப்பு. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் 51 பேர் ஈடுபடுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.