scorecardresearch

ஈரோடு தேர்தல் முடிவு: இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் மனித உரிமை துறையினர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றதால் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Coimbatore
Congress party workers Celebrate Erode Bypoll Victory

ஈரோடு கிழக்கு தொகுதியில்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றதால்  கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர்  இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

காலை முதலே  தி.மு.க.கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான தென்னரசுவை விட மூன்று மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

கிட்டத்தட்ட வெற்றி உறுதியானதை   கொண்டாடும் விதமாக கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையினர்  கோவை கரும்புக்கடை பகுதியில் இருந்து  ஆத்துப்பாலம் வரை வெற்றி கோசங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து அந்த பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு  இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா, மாவட்ட தலைவர் சாரமேடு சம்சு, மற்றும் நிர்வாகிகள் ஜான்சன் அக்கீம், சிக்கந்தர், கனி, நசீம் பைசல், அபு, நஜ்முதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erode east by election aiadmk evks elangovan erode east bypoll results