Erode bye-election Live: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்கியது.
இ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து இந்த தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தலுக்கான பிரச்சராம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். காலையில் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2021 பொதுத்தேர்தலில் இங்கு 66.24% வாக்குகள் பதிவாகியிருந்தது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் – 82,021, பெண்கள் – 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் – 17 பேர் என மொத்தம் 1.69 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவு பெற்றது. 138வது வாக்குச்சாவடியான ராஜாஜிபுரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளதால், அங்குமட்டும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க வேண்டுமென்று தேர்தல் பரப்புரையின்போது நான் வைத்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எந்திரத்தைச் சுற்றி முழுமறைப்பினை வைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு மனமார்ந்த பாராட்டும், நன்றியும்!
வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க வேண்டுமென்று தேர்தல் பரப்புரையின்போது நான் வைத்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எந்திரத்தைச் சுற்றி முழுமறைப்பினை வைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு மனமார்ந்த பாராட்டும், நன்றியும்!
— சீமான் (@SeemanOfficial) February 27, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 6 மணியை கடந்தும் வாக்காளர்கள் கூட்டம் குறையவில்லை. இதனால் 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1.60 லட்சம் பேர் வாக்களிப்பு
“ஈரோட்டில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும், தோல்வி பயத்தால் அதிமுக புகார் கூறி வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சுண்ணாம்பு ஓடை பகுதியைச் சேர்ந்த 95 வயது அங்கம்மாள் என்ற மூதாட்டி, வாக்களித்து தனது ஜனநாயக கடைமை ஆற்றினார்
தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது என ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.22% வாக்குப்பதிவாகி உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1,34,758 பேர் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கில் மை விவகாரத்தில் எந்தவித குறைபாடும் இல்லை, இந்தியா முழுவதுமே ஒரே இடத்தில் இருந்துதான் மை விநியோகம் செய்யப்படுகிறது என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் விநியோகம்; காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 % வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 49,740 பேரும், பெண்கள் 51,649 பேரும் இதுவரை வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக, ஆதாரம் இல்லாமல் புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி
இடைத்தேர்தலில் ஆதார் அட்டையைக் காட்டி வாக்கு செலுத்தலாம்; கிடைக்கப்பெறும் புகார்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மதியம் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1,01,392 பேர் வாக்களிப்பு
ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் போராட்டம்
2 மணி நேரமாக காத்திருந்தும், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவில்லை என போராட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 63,469 பேர் வாக்களிப்பு
ஈரோடு, அசோகபுரத்தில் 138, 139-வது வாக்குச்சாவடி அருகே திமுகவினர் கட்சி கொடியுடன் இருப்பதாக குற்றச்சாட்டு
180 வது வார்டில் ஆதார் அடையாள அட்டையுடன் சென்றால் வாக்களிக்க அனுமதி மறுப்பதாகவும் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார்
ஈரோடு, அசோகபுரத்தில் 138, 139வது வாக்குச்சாவடி அருகே திமுகவினர் கட்சி கொடியுடன் இருப்பதாக குற்றச்சாட்டு . 180 வது வார்டில் ஆதார் அடையாள அட்டையுடன் சென்றால் வாக்களிக்க அனுமதி மறுப்பதாகவும் குற்றச்சாட்டு . இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார்
ஈரோடு, சி.எஸ்.ஐ பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி வாக்களித்தார்.
தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தரமற்ற வாக்கு மை குறித்து அதிமுக புகார் அளித்துள்ளது. தனது வாக்கினை பதிவு செய்த பின் அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவு
கல்லுபிள்ளையார்கோவில் அருகே உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார் தென்னரசு. குடும்பத்தினரோடு வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்துள்ளார் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
பெரும் வாக்கு வித்யாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த தேர்தலின் முடிவு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். இரண்டு தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்களித்தார்
இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் . ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது. அக்ரஹாரம் வாக்குச்சாவடி சலசலப்பு குறித்து வாக்குச்சாவடி அலுவலர் குலோத்துங்கன் விளக்கம்
வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே தெரிவிக்காததால் வாக்காளர்கள் கடும் அவதி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் வாக்களித்தார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஈரோடு,பெரியண்ண வீதி வாக்குச்சாவடியில் தன் வாக்கை செலுத்தினார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது . காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு .