Advertisment

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு அலுவலக பேனரில் மோடி படம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலக பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு அலுவலக பேனரில் மோடி படம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலக பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வம் இரு தரப்புமே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.

அதே நேரத்தில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலக பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

அந்த பேனரில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி மற்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் படங்களும் முக்கியப் படங்க்ளாக இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தரப்பு ஈரோட்டில் திறந்துள்ள தேர்தல் அலுவலகத்திலும் அதே போல பேனர் வைக்கப்பட்டுள்ளது.

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற தலைப்புடன், திரு. மோடி மற்றும் அ.தி.மு.க.வின் பதவி பறிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களும் முக்கியமாகக் காட்டப்பட்டிருந்தன; எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழுவின் ஈரோட்டில் உள்ள அலுவலகத்தில் இதே போன்ற தலைப்புடன் கூடிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடடு இடைத் தேர்தலுக்காக ஓ.பி.எஸ் தரப்பு திறந்துள்ள தேர்தல் பணி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தலில் தனது தரப்பில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 118 பேர் கொண்ட குழுவை அறிவித்து, அதன் வேட்பாளராக பி. செந்தில் முருகனை அறிவித்தார். இந்த அலுவலகம் முனிசிபல் காலனி மெயின் ரோட்டில் முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. கிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த பேனரில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் மோடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களுடன், பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த பேனரில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா படங்களும் இடம் பெற்றுள்ளன. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநில பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை, புதிய நீதிக்கட்சி நிறுவனரும் தலைவருமான ஏ.சி.சண்முகம், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ. தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் எம். ஜெகன் மூர்த்தி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அதிமுக தனது தேர்தல் அலுவலகத்தில் பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாமல் “அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி” என்ற தலைப்புடன் பேனரை வைத்தது நினைவிருக்கலாம். தலைப்பு பின்னர், "அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி" என மாற்றப்பட்டது, மேலும் மூத்த தலைவர்கள் முந்தைய தலைப்பு அச்சுப் பிழையால் ஏற்பட்டதாகக் கூறினர்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி இ.பி.எஸ் அணி அ.தி.மு.க தனது தேர்தல் அலுவலகத்தில் பா.ஜ.க தலைவர்களின் படங்கள் இல்லாமல் “அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி” என்று குறிப்பிட்டு பேனர் வைத்தது. பின்னர், அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி" என மாற்றப்பட்டது. இதை அ.தி.மு.க மூத்த தலைவர்கள் முதலில் குறிப்பிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று இடம்பெற்றிருந்தது அச்சுப் பிழை ஏற்பட்டதாகக் கூறினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Ops Modi Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment