ஈரோடு மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமாக கனிமவளம் எடுப்பது போன்ற பிரச்னைகளை முன்வைத்து போராடியவர்களைத் தாக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய ஈரோடு வருகை தர உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுப்பது தொடர்பான வழக்கை கவனத்திற்கு கொண்டுவந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் உயிரைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 24-ம் தேதி ஈரோடு வரும்போது கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் செயல்பாட்டாளருமான ஈரோடு மாவட்ட காவல்துறையிடம் அளித்த மனுவில், ஆர்.எஸ். முகிலன் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு நிலத்தை அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆக்கிரமித்து ரூ. 16 கோடி மதிப்பிலான கனிமங்களை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
நிர்வாக மேஜிஸ்திரேட்டாக இருக்கும் பெருந்துறை வட்டாட்சியரிடம் இந்தப் பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டு, 2022 நவம்பரில் ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கக் கோரி 2023 ஜனவரி 4-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த் மனுவில் கூறப்பட்டுள்ளது. தினமும் மலைகள் அழிக்கப்பட்டு வருகிறது. மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த சென்னிமலையைச் சேர்ந்த ப.தமிழ்ச்செல்வன், மே 4, 2022-ல் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகவும், மேலும் சிலரை போலீஸார் கைது செய்ததாகவும், ஆனால் விவரங்களை வெளியிடத் தவறியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தாக்குதலைத் தூண்டிய குவாரி உரிமையாளர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, போலீசார் இந்த வழக்கை முடிக்க முயற்சி செய்கின்றனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்திற்கு ஸ்டாலின் வருகை தரும் போது ஜனநாயக முறையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும், எங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“