ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தில் புதன்கிழமை இரவு தி.மு.க.-வினருடன் மோதலில் ஈடுபட்டவர்களில் நம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வன்முறையைத் தூண்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், வீர்ப்பன்சத்திரத்தில் பிப்ரவரி 22-ம் தேதி இரவு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தி.மு.க-வினருக்கு இடையே நடந்த மோதலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர்களும், தி.மு.க-வைச் சேர்ந்த 6 பேர்களும் சில காவலர்களும் காயமடைந்தனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேரும் விஜயன் மற்றும் கணேஷ் பாபு என்று விசாரணையில் தெரியவந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் மேனகா காவேரி சாலையில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு பிரசார வாகனத்தில் பரப்புரை செய்தனர். அப்போது தி.மு.க-வினரின் தேர்தல் அலுவலகத்தை வீடியோ எடுக்க வேண்டும் என்று கூறியபோது அதை தி.மு.க-வினர் கேள்வி எழுப்பியதால் பிரச்னை தொடங்கியது.
இதையடுத்து, சிறிது நேரத்திலேயே இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் நாம் தமிழர் கட்சியைச் 6 பேர்களும் தி.மு.க.,வைச் சேர்ந்த 6 பேர்களும் போலீசார் சிலரும் காயமடைந்தனர். இந்த தாகுதலில் காயமடைந்தவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த தாகுதலில் ஒரு கார் சேதமடைந்தது.
தேர்த்ல் பிரசாரத்தின்போது வன்முறை ஏற்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சசிமோகன் தலைமையிலான காவல்துறை மற்றும் துணை ராணுவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து லேசான தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர், அங்கே 10 நிமிடம் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட சீமான், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து வன்முறையை தூண்டியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஜயன் மற்றும் கணேஷ் பாபு என 2 பேரை அடையாளம் கண்டனர். இதையடுத்து, ஈரோடு வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல், பிப்ரவரி 17-ம் தேதி ராஜாஜிபுரத்தில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் நிர்வாகிகள் மீது கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் தலையில் காயம் அடைந்தார்.
அப்போது, போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் அளித்த புகாரின் பேரில், தி.மு.க-வினர் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"