scorecardresearch

ஈரோடு கிழக்கு: தி.மு.க கூட்டணி, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு: தி.மு.க கூட்டணி, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக உடன் கூட்டணியில் பங்குகொள்வதாக தெரிவித்துள்ளார். அவரது தரப்பு வேட்பாளரான செந்தில் முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார்.

இதை தொடர்ந்து, ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைத்துள்ளது.

இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், வேட்புமனு தாக்கல் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erode east by polls ops candidate nomination filed today